குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பத்தூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-01-09 18:44 GMT

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் பாரதி ரோடு, கச்சேரி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராஜ் பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், திருப்பத்தூர் பண்டக சாலை தலைவர் கே.பி.ஆர். பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், டி.ரகுநாத் முன்னிலை வகித்தனர். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. நகர செயலாளரும், ஆவின் தலைவருமான எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசு அறிவித்த ரூ.1,000, சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவற்றை வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் கோமதி ராஜா, ரேவதி பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜா, எஸ்.பிரகாஷ், தேசிங்கு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விற்பனையாளர் மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்