பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா நடந்தது.

Update: 2023-01-14 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத் தலைவர் இ.எம்.டி. கதிரவன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியினர் மகளிர் அணியுடன் இணைந்து பொங்கல் வைத்து கட்சிக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.. இதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் கதிரவன், பா.ஜனதா பிரமுகரும் வழக்கறிஞருமான எஸ்.சண்முகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து முதுகுளத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய தலைவர் கபிலன், பொதுச்செயலாளர் அருண் பிரசாத், துணைத்தலைவர்கள் திருமுருகன், விஜயன் மற்றும் கற்பகம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் இருளாண்டி, ஒன்றிய பொருளாளர் கோவிந்தன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், மகளிர் அணி தலைவி ரமணி சக்திவேல், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு இந்திரஜித், பிற மொழி பிரிவு ஒன்றிய தலைவர் வீரகுமார், ஆன்மிக பிரிவு பாரதி மற்றும் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்