போடியில் பொங்கல் விழா

போடியில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-16 19:00 GMT

போடி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் புருஷோத்தமன் முன்னிலையில் தி.மு.க.வினர் இருசக்கர வாகனத்தில் அனைத்து வார்டுகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் போடி நகராட்சி தலைவர் எஸ்.ராஜராஜேஸ்வரி, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர், ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் எஸ். பி.கே.வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போடி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதற்கு சங்க தலைவர் பி.வேல்முருகன் தலைமை தாங்கினார். பொங்கல் விழாவையொட்டி ஸ்ரீநிவாசா மருத்துவமனை டாக்டர்கள் ஆர்.ராஜபாண்டியன், புவனி என்ற பார்கவி, ஸ்ரீநிதி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சந்திரசேகரன், பாண்டியன் டெய்லர்ஸ் உரிமையாளர் முத்துப்பாண்டியன், பில்டிங் காண்ட்ராக்டர் என்ஜினீயர் மணிவண்ணன், ராஜ்பவன் ஓட்டல் உரிமையாளர், நியூ விஜயா ஓட்டல் உரிமையாளர்கள் பெருமாள் முரளி, சுப்புலட்சுமி, ஜே.ஜே.ஜுவல்லரி உரிமையாளர்களான அன்பரசன், ஜெகதீசன், ஜெ.ஜெ.கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போடி-மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்டார் கிரீன் ராயல் ஓட்டல் சார்பில் சிறப்பு உணவு திருவிழா, பொங்கல் விழாவும் நடைபெற்றது. ஓட்டல் நிர்வாகி செல்வம் வரவேற்றார். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான பிரியாணி வகைகள், சிறப்பு சைனீஸ் உணவு வகைகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்