டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக்பள்ளியில் பொங்கல் விழா
அரக்கோணம் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
அரக்கோணம் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க மாநில செயல் தலைவர் வி.மோகன் நாயுடு தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் என்.தனபால் நாயுடு, செயலாளர் கே.எம்.தேவராஜ் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை என்வைரோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு கலந்து கொண்டார். இணை செயலாளர் கே.மோகன் ரங்கசாமி நாயுடு, உறுப்பினர் டி.எஸ்.முரளி நாயுடு மற்றும் திருத்தனி வி.ஜி.என்.பள்ளி உறுப்பினர் ரமேஷ் நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.