அடைக்கலபட்டணம் பள்ளியில் பொங்கல் விழா
அடைக்கலபட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பட்டிமன்றம், பேச்சு போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பொங்கல் திருவிழாவின் பெருமைகளை மாணவ-மாணவிகள் எடுத்துரைத்தனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளியின் அகடாமிக் இயக்குனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் அபிஷா ராஜ்குமார் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி, ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.