திருப்பத்தூர்
திருப்பத்தூர் பூமாயியம்மன் கோவில் வசந்தப் பெருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றப்பட்டு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது, இவ்விழாவில் 4-ம் நாள் விழாவாக பொங்கல் வைபவம் நேற்று நடைெபற்றது. கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். நிர்வாக குழு சார்பாக பச்சரிசி, வெல்லம், பால், போன்றவை வழங்கப்பட்டது. முன்னதாக அம்மன் சந்தனகாப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்தப்பெருவிழா குழுவினர் செய்திருந்தனர்.