கடவூர் ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செவலூரில் உள்ள ஸ்ரீரங்க கவுண்டர் குளம் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூமா ராஜேந்திரன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.