தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது.
சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.