மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பறையடித்து ஆர்ப்பாட்டம்
முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதை கண்டித்தும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளை செய்து தரக்கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பறையடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு தொடங்கி வைத்து பேசினார். இதில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும், இரவு நேரம் உட்பட 24 மணிநேரமும் அவசரத்தில் வரும் நோயாளிகளை கவனிக்க டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.