கரும்பு, வெல்லம் வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்
பொங்கல் பரிசுடன் கரும்பு, வெல்லம் வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடந்தது
கொரடாச்சேரி;
தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழக பா. ஜனதா விவசாய அணி சார்பில் தமிழக முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய், வெல்லம், கரும்பு ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி கலெக்்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் கரும்பு மற்றும் தேங்காயுடன் கோஷம் எழுப்பினா்.