இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கீழையூர் அருகே திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-07 18:34 GMT

வேளாங்கண்ணி;

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினரும், முன்னணி தலைவருமான வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் காந்தி, மாவட்டகுழு உறுப்பினர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயசங்க ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்