தூத்துக்குடியில் வ.உ.சி.சிலைக்குஅரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் வ.உ.சி.சிலைக்குஅரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-11-18 18:45 GMT

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவுநாள்

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு அவரது உருவச்சிலை மற்றும் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுசிரவீந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ், ஐசன்சில்வா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் தனலெட்சுமி, பீரித்தி, சாந்தி, அமைப்பு சாரா தொழிற்சங்கம் நிர்மல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டர்.

ஐ.என்.டி.யு.சி.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பாரத்தில் வ.உ.சிதம்பரனார் 86-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு மெயின் பஜாரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் பால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கும், வ.உ.சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கும் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து யூனியன் தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி ஆகியோர் மாலை அணிவித்தனார். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் இசக்கிமுருகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், அருண்குமார், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் சங்கம்

ஓட்டப்பாரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் செயலாளர் மரகதவேல், பொருளாளர் லாரன்ஸ், துணைத் தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் நல்லதம்பி மற்றும் வழக்கறிஞர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ.உ.சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் வேல்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் வருகை தந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வ.உ.சி. 86-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சைவ வேளாளர் சங்க வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு சங்க தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் சங்க துணை தலைவர் நடராஜன், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் பிரபு, பொருளாளர் பால சுப்பிரமணியன், தணிக்கையாளர் சுந்தரம் மற்றும் இளைஞர் அணியினர் மலர் மரியாதை செலுத்தினர். வ.உ.சி. சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கருப்பசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கதிரேசன், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் மரியாதை செலுத்தினா்.

கொள்ளு பேத்தி

வ.உ.சி. கொள்ளு பேத்தி செல்வி கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள தனது வீட்டில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், வ.உ.சி. முழு உருவ வெண்கலச் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும். பாராளுமன்ற பிரதான நுழைவாயிலுக்கு வ.உ.சி. பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோவில்பட்டி வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். இந்த கோரிக்கையை நிறைவேற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றி தர வேண்டும்,என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்