அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லையில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவு தினம்
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சந்திப்பு அண்ணா சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, மாவட்ட அவைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர்கள் விஜிலா சத்யானந்த், தர்மன், எஸ்.வி.சுரேஷ், பொருளாளர் வண்ணை சேகர், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், ஒன்றியச்செயலாளர் அன்பழகன், கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், பவுல்ராஜ், ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லட்சுமணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க.வினர் அமைப்புச்செயலாளர் சுதா பரமசிவம் தலைமையில் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதபோல் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ம.தி.மு.க.- தே.மு.தி.க.
அ.ம.மு.க.வினர் மாவட்ட செயலாளர்கள் பரமசிவன், இசக்கிமுத்து ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ம.தி.மு.க.வினர் பகுதிச்செயலாளர் மணப்படை மணி தலைமையிலும், தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி.நகரில் அண்ணா படத்துக்கு பாளையங்கோட்டை யூனியன் தலைவரும், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.