அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2022-09-15 19:40 GMT

நெல்லையில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.

முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, ரேவதி பிரபு, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான சுதா மூர்த்தி, சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன், களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, இளைஞர் அணி ஆறுமுகராஜா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மேயர் புவனேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், கவுன்சிலர் சந்திரசேகர், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்மா எஸ்.செல்வகுமார், பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க -தே.மு.தி.க

அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் நெல்லை பரமசிவன், இசக்கிமுத்து ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திரைப்பட வர்த்தக பிரிவு கலை குடும்ப நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ரகுமான்ஷா தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநகராட்சி அலுவலகம்

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்