போலீஸ் ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு உடல், 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது

Update: 2022-10-13 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்தவர் சுந்தரையா. இவர் சேர்ந்தபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் புளியங்குடி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வரும் மருது பாண்டியன் என்பவருடன் சுந்தரையா சென்று கொண்டிருந்தார். புளியங்குடி மின்வாரியம் அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார், மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுந்தரையா நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு சுந்தரையாவின் உடல் அவரது சொந்த ஊரான இருமன்குளத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள சுடுகாட்டில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மதுவிலக்கு துணை சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சுந்தரையாவின் உடலுக்கு் 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்