நடுரோட்டில் போலீஸ், மனைவியை வழிமறித்து தாக்குதல்

ஆரல்வாய்ெ்மாழியில் நடுரோட்டில் போலீஸ் மற்றும் அவருடைய மனைவியை வழிமறித்து தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-12-04 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் நடுரோட்டில் போலீஸ் மற்றும் அவருடைய மனைவியை வழிமறித்து தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் ஏட்டு

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட், லைப்ரரி தெருவை சேர்ந்தவர் ஐசக்ராஜன் (வயது 31). இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரெமிலா.

கடந்த தீபாவளியன்று ஐசக் ராஜனின் குழந்தை வீடு அருகே பட்டாசு வெடித்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த டேவிட் அய்யாபழம் என்பவர் குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதை ரெமிலா தட்டிக் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரெமிலாவை பார்க்கும் போதல்லாம் டேவிட் அய்யாபழம் தகாத வார்த்தையால் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நடுரோட்டில் தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஐசக்ராஜன், ரெமிலாவுடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நடுரோட்டில் நின்ற டேவிட் அய்யாபழம் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஐசக் ராஜன் மற்றும் அவர் மனைவியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஐசக்ராஜன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டேவிட் அய்யாபழம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்