உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை
உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலையில் தத்தனூர் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியது, ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.