காவலர் பயிற்சி பள்ளியில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட 280-க்கும் மேற்பட்ட 2-ம் நிலை பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் காவலர் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா வேலூர் பயிற்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயிற்சி பெண் காவலர்கள் மேற்கொள்ளும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார். தொடர்ந்து சட்ட விதிகள் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் அவர்களிடம் கலந்துரையாடி குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் மற்றும் சட்ட போதகர்கள் உடன் இருந்தனர்.