ஜேடர்பாளையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி காரணம் என்ன? போலீசார் விசாரணை

ஜேடர்பாளையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-16 13:48 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த நீலகண்டன் வழக்கு தொடர்பாக வெளியே சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?

பின்னர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் நீலகண்டன் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. அவர் பணிச்சுமை காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னரே‌ நீலகண்டன் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என கூறப்படுகிறது. விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்