போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்
அரியலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. அரியலூரில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் பொதுமக்களிடம் இருந்து 11 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.