மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசார்
மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
செய்யாறு
மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
செய்யாறு நகரில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே ஆற்காடு மற்றும் ஆரணி சாலை குண்டும் குழியுமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் மழையால் இந்த சாலைகள் ேமலும் சேதம் அடைந்தது. நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.இந்த நிலையில் நேற்று செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் ஆற்காடு சாலை மற்றும் ஆரணி சாலையில் முரம்பு மண் கொட்டி பள்ளங்களை சீரமைத்தனர். போலீசாரை அந்த வழியாக சென்றவர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.