ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் அதிரடி சோதனை

கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-11 19:00 GMT

கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் அரிசி கடத்தல்

வெளி மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தென்னரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு

குறிப்பாக கிருஷ்ணகிரியில் -பெங்களூரு சாலையில் உள்ள சுங்கச்சாவடி வழியாக ஓசூர், பெங்களூரு சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்தனர்.

இதேபோல் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன சோதனை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்