சிவகாசி பகுதிகளில் போலீசார் ஆய்வு

சிவகாசி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2023-01-22 19:36 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீசார் ஆய்வு

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பேன்சிரக பட்டாசுகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் ராமானுஜம் உத்தரவிட்டதன்பேரில் சிவகாசி உட்கோட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி விதிமீறல்களை தடுத்து வருகிறார்கள்.

பட்டாசுகள் பறிமுதல்

இந்தநிலையில் திருத்தங்கல் போலீசார் ஆலமரத்துப்பட்டி பகுதியில் ஆய்வு செய்த போது திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 21) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரிகளையும், குழாய்களையும் வைத்திருந்தது தெரியவந்தது.

இவைகளை கொண்டு பேன்சிரக பட்டாசுகளை தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்