சாலையோரம் கிடந்த ஜெலட்டின் குச்சி-போலீசார் விசாரணை

Update: 2022-09-24 18:45 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடி கிராமம் கலைஞர் நகரில் சாலையோரத்தில் மர்ம பொருள் கிடப்பதாக சிங்காரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சாலையோரம் கிடந்தது கல் குவாரிகளில் பாறைகளை உடைக்க பயன்படும் வெடி பொருளான ஜெலட்டின் குச்சி என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஜெலட்டின் குச்சியை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையோரம் கிடந்த ஜெலட்டின் குச்சி பாறைக்கு வெடி வைக்க கொண்டு சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்