டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை
கல்லூரி பஸ்சுக்கு வழிவிட மறுத்து டிரைவரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வாலிகண்டபுரத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை அழைத்து செல்வதற்காக கல்லூரி பஸ் சென்றுள்ளது. இந்த பஸ்சை முகமது அனீஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அன்னமங்கலம் கிராமம் வழியாக சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 27), ராஜசேகர் (32), அஜய் (23) ஆகிய 3 பேர் பஸ்சுக்கு வழி விடாமல் சாலையை மறித்துக்கொண்டு இருந்தனர். இதனால் அவர்களுக்கும், டிரைவர் முகமது அனீஸ்க்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட வினோத், ராஜசேகர், அஜய் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.