மதுபான கடைகளில் போலீசார் ஆய்வு

பழனி பகுதியில் மதுபான கடைகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-11 19:30 GMT

பழனி பகுதியில் உள்ள மதுபார்கள் முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா? என கலால்துறை மற்றும் போலீஸ் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட பார்கள் அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில் பழனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது. குறிப்பாக மதுகடை திறப்பதற்கு முன்பே மதுவிற்பனை ஜோராக நடப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் பழனி நகர், அடிவாரம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள பணியாளர்களிடம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கடை திறக்க வேண்டும், விற்பனை செய்யும் நோக்கில் மதுபானம் வாங்கினால் மது வினியோகம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். தொடர்ந்து பூட்டப்பட்ட மது பார்கள் ஏதும் செயல்படுகிறதா? என பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்