விபத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

விபத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-05-05 19:00 GMT

நீடாமங்கலம் வட்டம் தேவங்குடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுப்பையா (வயது59). இவர் நேற்று நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற பணிக்காக வந்தார். அங்கு பணிகளை முடித்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு தனது மோட்டார்சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். மதியம் 2.15 மணியளவில் கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் வளைவு அருகில் எதிரில் வந்த லாரி சுப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வலதுகால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த சுப்பையா உடனடியாக நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுப்பையா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்