ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

மோப்பநாய் ஓய்வுபெறுவதை போலீசார் கேக்வெட்டி கொண்டாடினர்.

Update: 2022-06-01 17:59 GMT

வேலூர்

மோப்பநாய் ஓய்வுபெறுவதை போலீசார் கேக்வெட்டி கொண்டாடினர்.

வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களின் போது மோப்பநாய்களின் உதவி பெரிதும் தேவைப்படும். இதற்கென காவல்துறையில் மோப்பநாய்கள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு நாய்களுக்கும் ஒரு தனித்திறமை உண்டு. சில நாய்கள் வெடிகுண்டுகளை மட்டும் தனது மோப்பசக்தியால் கண்டுபிடிக்கும். சில நாய்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும். சில நாய்கள் போதை கடத்தலை தடுக்க பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் வேலூர் மோப்பநாய் பிரிவில் லூசி என்ற நாய் வெடிகுண்டுகளை கண்டறிதலில் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த நாய் காவல்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. 11 ஆண்டுகள் பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் லூசிக்கு பணி நிறைவு விழா நேற்று போலீசார் கொண்டாடினர். அதன்படி லூசிக்கு கேக் வெட்டி, மாலை அணிவித்து கவுரவித்தனர்.

லூசி 2014-ம் ஆண்டு நடந்த மாநில அளவிலான துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் 2-ம் பரிசாக வெள்ளி பதக்கத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

==

Tags:    

மேலும் செய்திகள்