விடுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் தங்கி இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்-துணை சூப்பிரண்டு பேச்சு

விடுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் தங்கி இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்-துணை சூப்பிரண்டு பேச்சு

Update: 2023-07-20 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டுஅலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் பேசும்போது, தற்போது ஆடி திருவிழா நடைபெற்று வருவதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரும் தங்கி இருந்தால் உடனே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்