தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Update: 2023-01-24 19:58 GMT

குடியரசு தினத்தையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தின விழா

இந்திய குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தஞ்சை மாவட்டத்திலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர். அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை

அதை தொடர்ந்து தஞ்சைக்கு வரும் அனைத்து ரெயில்களிலும் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

இதேபோல் பூதலூர், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்