புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
தர்மபுரியில் புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
தர்மபுரி மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில்குமார் கடந்த 14.3.2023 தேதி ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது குடும்பத்துக்கு உதவிடும் வகையில் இவருடன் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மாநில முழுவதும் உள்ள காவலர்கள் அனைவரும் காக்கும் கரங்கள் குழு சார்பாக ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் நிதி திரட்டினர்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அவருடன் பணியில் சேர்ந்த போலீசார் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் நிதி திரட்டினர். இவ்வாறு திரட்டப்பட்ட மொத்தம் ரூ.9 லட்சத்திற்கான காசோலையை மறைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் மனைவி மஞ்சு, மகன்கள் சந்திரகுமார், சரண்குமார் ஆகியோரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் வழங்கினார். அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் செந்தில்குமாருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் உடன் இருந்தனர்.