ெபாதுமக்களுக்கு இடையூறு: மசாஜ் சென்டரை மூட போலீஸ் உத்தரவு

ெபாதுமக்களுக்கு இடையூறு: மசாஜ் சென்டரை மூட போலீஸ் உத்தரவு

Update: 2023-05-16 21:23 GMT

பவானி

பவானி அருகே உள்ள லட்சுமி நகரில், ஈரோடு அக்ரஹாரத்தை சேர்ந்த கீர்த்தன் (வயது 35) என்பவர் கடந்த 1½ ஆண்டாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மசாஜ் சென்டரை நடத்தி வந்தார். மேலும் இதன் ஒரு பகுதியில் பெண்களுக்கான அழகு நிலையமும் நடத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அழகு நிலையத்துக்குள் புகுந்த 6 பேர் கொண்டகும்பல் அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால், அதை அகற்ற வேண்டும் என கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் போலீசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மசாஜ் சென்டரையும், அழகு நிலையத்தையும் மூட பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்