குடியரசு தின விழாவை முன்னிட்டு தர்மபுரி வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை
தர்மபுரி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு தர்மபுரி வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
குடியரசு தின விழா
இந்திய குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி ரெயில் நிலைய பகுதியில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தர்மபுரி ரெயில் நிலைய வளாகத்தில் நுழைவுவாயில், பிளாட்பாரங்கள் ஆகிய பகுதிகளில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டன.
கண்காணிப்பு பணி
இதேபோல் தர்மபுரி வழியாக சென்ற ரெயில்களில் சோதனை நடத்தினர். மேலும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து போலீசாருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.