பொறுப்பேற்பு

Update: 2023-01-04 18:45 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி விருப்ப மாறுதலில் ஐதராபாத் போலீஸ் அகாடமிக்கு சென்று விட்டார். இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கலைச்செல்வன், நாமக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து நேற்று அவர் நாமக்கல் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். நாமக்கல் மாவட்டத்தின் 28-வது போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன்பு சென்னை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். சென்னையில் போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. இவரது சொந்த மாவட்டம் ஈரோடு ஆகும். புதிய போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்