போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள முத்துவயல் வடக்கு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் ராம்ஜி (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரெத்தினம் என்பவரின் மகள் சண்முகப்பிரியா (23) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு சண்முகப்பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இருவரும் ராமநாதபுரம் வந்து அரண்மனை பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து காதல் ஜோடி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதல்ஜோடியின் பெற்றோர் தரப்பினரை அழைத்து பேசினர். இதன் பின்னர் போலீசாரின் வழிகாட்டுதலுடன் வாலிபரின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.