நடிகர் ராதாரவி மீது போலீசில் புகார்
நடிகர் ராதாரவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.;
காரைக்குடி,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நவ்ஷாத் அலி கான் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சென்னையில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் ராதாரவி பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் புகார் மனுவிற்கான ரசீதை வழங்கி உள்ளனர்.