போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
உடுமலையை அடுத்த சின்னவாளவாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53). தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவர், தான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அருகில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர் மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அதில் மாரிமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி கதறி அழுது உள்ளார். இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.