கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

பண்பொழி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-06-21 16:47 GMT

செங்கோட்டை:

பண்பொழி அருகே டி.மீனாட்சிபுரம் ஊரில் திவான் மைதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் வீரர்கள் செல்வம், சந்திரமோகன், செந்தில்குமார், சிவக்குமார், ராஜா, கோமதி சங்கர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்