பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு..!
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் நேற்று வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
கருணாநிதியின் பிறந்த நாளானவரும் ஜூன் 3-ம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல்நாட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா.... கடலையே மை செய்யும் தீராத பேனா.... கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா.... ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா.... முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா.... கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக" என்று பதிவிட்டுள்ளார்.