விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 20). தொழிலாளியான இவர் 9-ம் வகுப்பு பயிலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் தொழிலாளியான மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.