போக்சோவில் தொழிலாளி கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-25 18:45 GMT

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மதன்குமார் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர், பிளஸ்-2 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்தார். பின்னர் அவரிடம் திருமணம் செய்வதாகக்கூறி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் ெகாடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்