பா.ம.க. சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
பா.ம.க. சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இட ஒதுக்கீட்டுக்காக உயிர் தியாகம் செய்த 21 பேரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் ஏழுமலை, நகர தலைவர் ஜெயசீலன், நகராட்சி வார்டு உறுப்பினர் சாரதி, வழக்கறிஞர்கள் கோகுல், லோகநாதன் ராமு, பார்த்திபன், கணேசன், மகேந்திரன், பாபு, கோவிந்தராஜ், துளசி, சந்தோஷ், சரவணன், ரமேஷ், ஜெயகுமார் சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.