ஸ்ரீவைகுண்டம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் கட்சிக் கொடியேற்றும் விழா நடைபெற்றது. பா.ம.க தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் சிவபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் நெப்போலியன், நகர செயலாளர் ஆழ்வார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மூக்காண்டி, மாவட்ட துணை தலைவர் பரமசிவன், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.