கலவை
கலவையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் விக்ரமன், திருமலை, சுரேஷ், பேரூராட்சி செயலாளர்கள், வாலாஜா நகர செயலாளர் ஞானசேகர், ஆற்காடு நகர செயலாளர் செல்வம், ராணிப்பேட்டை நகர செயலாளர் சாந்தி பூசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் வரவேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக கலவை பஸ் நிலையம் அருகே பா.ம.க. கொடி ஏற்றப்பட்டது.
கூட்டத்தில் கலவையில் 24 மணி நேரம் மதுபாட்டில்களும், கஞ்சாவும் விற்கப்படுகிறது. காட்டன் சூதாட்டமும் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் சட்டசபையில் ஒருமனதாக ஆன்லைன் சூதாட்டத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பா.ம.க. இளைஞரணி செயலாளர் பகவான் கார்த்திக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா சிவா, மாவட்ட துணை செயலாளர் கதிர்வேல், பூண்டி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கலவை நகர செயலாளர் அன்பு நன்றி கூறினார்.