பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2024-05-27 21:39 IST

சென்னை,

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். அவர் 31ம் தேதி முதல் 1ம் தேதி வரை விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார்.

1ம் தேதி தியானத்தை முடித்துக்கொண்டு அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் புறப்படும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிகட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்