திருப்பாசேத்தியில், விவசாயிகள் செழுமை மையம்-காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

விவசாயிகள் பயன் பெறுவதற்காக ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் திருப்பாசேத்தியில் விவசாயிகள் செழுமை மையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Update: 2022-10-17 18:45 GMT

மானாமதுரை,

விவசாயிகள் பயன் பெறுவதற்காக ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் திருப்பாசேத்தியில் விவசாயிகள் செழுமை மையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விவசாயிகள் செழுமை மையம்

இந்திய உரத்துறை சார்பில் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ், 600 இடங்களில் விவசாயிகள் செழுமை மையத்தினை நேற்று இந்தியா முழுவதும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதே போல் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில், விவசாயிகள் செழுமை மையம் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பாச்சேத்தியில் விவசாயிகள் செழுமை மையத்தினை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் உரம், விதை பூச்சிக்கொல்லி மருந்துகள், எந்திரங்கள், மண் மற்றும் விதை, பரிசோதனை வசதிகள், வேளாண் ஆலோசனைகள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் விவசாயிகள் செழுமை மையம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் மூலம் விவசாயிகள் செழுமை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறந்த முறை

ஒரே நாடு ஒரே உரத்திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து உரங்களும் சிறந்த முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பாரத் என்னும் பெயரில் மட்டுமே அனைத்து உரங்களும் விவசாயிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 69,203 விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் 13.84 கோடி விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்புவனம் உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம், வேளாண் உதவி இயக்குனர் பரமேஸ்வரன், வேளாண்மை அலுவலர் பொன்னுச்சாமி, உரக்கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்