தூக்கில் பிணமாக தொங்கிய பிளஸ்-2 மாணவி

ஆம்பூரில் பிளஸ்-2 மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-22 23:38 IST
தூக்கில் பிணமாக தொங்கிய பிளஸ்-2 மாணவி

பிளஸ்-2 மாணவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மகள் கீதாபிரியா (16). தேவலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் கீதாபிரியா நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்