மண்எண்ணெய் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அருகே மண்எண்ணெய் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அடுத்த கீழ நெடும்பூர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய மகள் ஆனந்தி(17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மணிகண்டனுக்கும், ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்து விட்டார்.
இதையறிந்த மணிகண்டனும், ராஜேஸ்வரியும் ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மணிகண்டன் குமராட்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது