பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்

காரைக்குடியில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Update: 2022-06-24 18:15 GMT

காரைக்குடி,

காரைக்குடி வடக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வரும் பெண்ணின் மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் பிளஸ்-1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை பார்க்கும் அருண்பாண்டி (வயது 23) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் அருண் பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்