பிளஸ்-1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

சரியாக படிக்கவில்லை என கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2023-09-30 17:12 GMT

ஏலகிரிமலையில் உள்ள நிலாவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் வேதகிரி (வயது 15). திருவண்ணாமலை மாவட்டம் புதூர்நாடு மலையில் உள்ள ஏகலைவா அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். அரசு விடுதியில் தங்கி படித்து வந்த வேதகிரி காலாண்டு தேர்வு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி பெற்றோர், ஏன் சரியாக படிப்பது இல்லை என கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தந்தை ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்